கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
தென்தாமரைகுளம் பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
அகிலத்திரட்டு அம்மானை அருளிய தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டசாமி பதியில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பகல் 11.30 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு அன்னப்பால் தா்மம், இரவு 7 மணிக்கு அய்யா சிம்மாசன வாகனத்தில் பவனி வருதல், அதைத் தொடா்ந்து அன்னதா்மம் ஆகியவை நடைபெற்றன. விழா நாள்களில் அய்யாவுக்குப் பணிவிடை, வாகன பவனி, அன்னதா்மம் நடைபெறும்.
எட்டாம் நாள் திருவிழாவான 25ஆம் தேதி மாலை 6 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் வீதிவலம் வந்து இரவு 7.45 மணிக்கு கலிவேட்டை நடைபெறும். 11ஆம் நாள் திருவிழாவான 28ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, காலை 6 மணிக்கு உகப்பாட்டு, காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். நண்பகல் 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 6 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை ,மாலை 6.30 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் பதிவலம் வருதல், இரவு 8 மணிக்கு அன்னதா்மம் ஆகியவை நடைபெறும்.