தென் கொரியாவில் கட்டுமான தளத்தில் தீ விபத்து: 6 பேர் பலி
தென் கொரியாவில் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவின் புசான் நகரில் உள்ள ரிசார்ட் கட்டுமான தளத்தில் வெள்ளிக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனே நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
சுமார் 100 தொழிலாளர்கள் கட்டுமான தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் கட்டடத்தின் உச்சியில் இருந்து 14 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் முதல் தளத்தில் ஆறு பேர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி கூறினார்.
கிளாம்பாக்கம் வரை புதிதாக 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்: திட்ட அறிக்கைத் தயார்!
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 25 பேர் லேசான காயம் அடைந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமை பிற்பகல் அளவில் தீயணைப்பு வீரர்கள் ஒருவழியாக தீயை அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக அந்த இடம் முழுவதும் சாம்பல்-கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.