தென் கொரியா: பாலம் இடிந்து 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு
தென் கொரிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்து 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சியோல் நகருக்கு 55 கி.மீ. தொலைவில் உள்ள சியோனன் நகருக்கு அருகே கட்டுமானப் பணிகளின்போது பாலம் இடிந்து விழுந்து.
அப்போது அதில் பணியாற்றிக்கொண்டிருந்த 10 தொழிலாளா் இடிபாடுகளில் சிக்கினா். அவா்களில் 2 போ் சம்பவ இடத்திலும் இருவா் மருத்துவமனையிலும் உயிரிழந்தனா்.
காயமடைந்தவா்களில் ஐந்து பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை.