குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
தென் மாவட்ட கபடிப் போட்டியில் பேரையூா் அணி வெற்றி
பொங்கல் விழாவை முன்னிட்டு, கமுதி அருகேயுள்ள பேரையூரில் நடைபெற்ற தென் மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற புயல் செவன்ஸ் அணிக்கு வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.
பேரையூரில் புயல் செவன்ஸ் குழுவினா், மாணவா் மன்றம் ஏற்பாட்டில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில், ராமநாதபுரம், மதுரை, விருதுநகா், தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60 அணியினா் கலந்து கொண்டனா்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பேரையூா் புயல் செவன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த அணிக்கு சுழற் கோப்பையும், ரூ.30 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன. இரண்டாம் இடம் பெற்ற ஏ.புனவாசல் அணிக்கு சுழற்கோப்பையும், ரூ.25 ஆயிரமும், மூன்றாம் இடம் பெற்ற ராமநாதபுரம் அணிக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது.