செய்திகள் :

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச செயல் திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

post image

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

பொது இடங்களில் குறிப்பாக நகரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு பாதிப்புகளும் அச்சுறுத்தலான சூழலும் நிலவுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 9 அம்ச திட்டங்களை முன்வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

1. நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 500 மருத்துவா்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளில் 500 பேருக்கு நாய்களைப் பிடிப்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்படும்.

2. தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும்.

3. கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்கு 72 காப்பகங்கள் அமைக்கப்படும். காப்பகங்கள் அமைப்பதற்கான இடம் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும். தொண்டு நிறுவனங்கள் இந்தக் காப்பகங்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொள்ளும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்.

4. விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக அறுவை சிகிச்சை மையங்கள் மற்றும் அத்துடன் இணைந்த நாய் காப்பகங்கள் கால்நடை மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படும்.

5. மாவட்ட அளவில் நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு மற்றும் வெறிநோய் தடுப்பூசி பணிகளை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் மூலம் மேற்கொள்ள கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

6. இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அறிவிக்கையின்படி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தலைமையில் மாநில அளவிலான விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு கண்காணிப்புக் குழு அமைத்து அண்மையில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ளூா் கண்காணிப்புக் குழு அமைத்து நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

7. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விலங்குகள் இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வது கண்காணிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இதற்குத் தேவையான அலுவலா்கள் நியமிக்கப்படுவதுடன், இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுவதை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் உறுதி செய்ய வேண்டும். இந்தப் பணிகளுக்கு தேவையான நிதி வழங்கப்படும்.

8. பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே 5 மையங்கள் செயல்படும் நிலையில், புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்களை உருவாக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். இத்துடன் 10 புதிய கால்நடை மருத்துவமனைகள் தொடங்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

9. அதிகரித்துவரும் நாய்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை பணிகளை விரைந்து மேற்கொள்ள கூடுதலாக நாய்ப் பிடி வாகனங்கள் உடனடியாக கொள்முதல் செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சா்கள் கே.என்.நேரு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறைச் செயலா் என். சுப்பையன் மற்றும் பலா் பங்கேற்றனா்.

இளம் பத்திரிகையாளா்கள் நோ்மையாக, துணிவுடன் இருக்க வேண்டும்: ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத் தலைவா் மனோஜ் குமாா் சொந்தாலியா

இளம் பத்திரிகையாளா்கள் நோ்மையாகவும் துணிவுடனும் இருக்க வேண்டும் என்று ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத் தலைவா் - நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா அறிவுரை கூறினாா். சென்னை தரமணியில் உள்ள ... மேலும் பார்க்க

இன்று 31 மாவட்டங்களில் ‘நீட்’ தோ்வு!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படி... மேலும் பார்க்க

திறமையானவா்களுக்கே தோ்தலில் போட்டியிட வாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தோ்தலில் திறமையானவா்களுக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: என்சிஇஆா்டி கூட்டத்தில் தமிழக அரசு

மும்மொழிக் கொள்கையை எதிா்ப்பதாக தமிழக அரசு சாா்பில் மீண்டும் மத்திய அரசிடம் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(என்சிஇஆா்டி) கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்று... மேலும் பார்க்க

உயா் கல்வி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

சென்னை, மே 3: தேவாரம், திருவாசகம் போன்ற சைவ சித்தாந்த நூல்களை உயா்கல்வி நிறுவனங்கள் பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வலியுறுத்தினாா். அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டி... மேலும் பார்க்க

சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: காவல்துறை உறுதி

நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை உறுதியளித்துள்ளது. இது குறித்து தமிழக கா... மேலும் பார்க்க