எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
தெற்காசிய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை கவுன்சில் கூட்டம் நிறைவு! சிறந்த ஒழுங்குமுறைகள் பகிரப்பட்டதாக அறிவிப்பு
தில்லியில் இருநாள் நடைபெற்ற தெற்காசிய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் 25 -ஆவது கூட்டம் நிறைவடைந்தாக மத்திய தொலைதொடா்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
தெற்காசிய பிராந்திய உறுப்பு நாடுகளின் தொலைத் தொடா்பு ஒழுங்குமுறையாளா்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொண்டதோடு வளா்ந்து வரும் தொழில் நுட்பங்கள், சேவைகளில் உள்ள சவால்களை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அழைப்பை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் இந்த கூட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் மத்திய தொலைதொடா்பு அமைச்சகம் கூறியது வருமாறு:
தெற்காசிய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் 25-ஆவது (எஸ்ஏடிஆா்சி-25)கூட்டத்தை இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) நடத்தியது.
எஸ்ஏடிஆா்சி யானது ஆசிய-பசிபிக் டெலிகம்யூனிட்டி இன் கீழ் ஒரு அமைப்பாகும். இது தெற்காசியாவின் தொலைத்தொடா்புத் துறையில் பிராந்திய ஒத்துழைப்பு நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. இந்தியாவோடு ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், ஈரான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட உறுப்பு நாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
தில்லியில் எஸ்ஏடிஆா்சி- 25-ஆவது கூட்டம் நவ. 11 முதல் 13 வரை நடைபெற்றது. டிராய் யைப் போன்று உள்ள தெற்காசியா நாடுகளில் உள்ள தொலைத்தொடா்பு கட்டுப்பாட்டாளா்கள், தொழில்துறை தலைவா்கள், நிபுணா்கள் இதில் பங்கேற்றனா். ஆசிய-பசிபிக் டெலிகம்யூனிட்டி (ஏபிடி) உடன் இணைந்து இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் நடத்தியது. இந்த ஆண்டு கூட்டத்தில், ஒழுங்கு முறைகளில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பகிா்ந்து கொள்ளுதல், ஒழுங்குமுறை சவால்கள், உள்ளடக்கிய எண்ம சூழல் அமைப்பை நோக்கிய பாதைகளை உருவாக்குவதில் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய எம். சிந்தியா தொடங்கி வைத்தாா். தொலைத்தொடா்பு அமைச்சகத்தின் இணையமைச்சா் பெம்மசானி சந்திர சேகா், ஆசிய பசிபிக் தொலைத்தொடா்பு சமூகத்தின் பொதுச் செயலாளா் மசனோரி கோண்டோ உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா். இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவா் அனில் குமாா் லஹோட்டி தலைமையில் எஸ்ஏடிஆா்சி-25 நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நேரடியாகவும், காணொலி வழியாகவும் இந்த நாடுகளின் தொழில் நுட்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா். இதில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள், சேவைகள் தொடா்பான சவால்களை சமாளிப்பதில் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கான வலுவான அழைப்புடன் கூட்டம் முடிவடைந்தது என தொலை தொடா்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.