இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
தேசிய ஆடவா் குத்துச்சண்டை: சா்வீஸஸ் ஆதிக்கம்
எலைட் 8ஆவது தேசிய ஆடவா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சா்வீஸஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பரேய்லியில் நடைபெறும் இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சா்வீஸஸ் அணி தொடா் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் நடத்தப்படும் இப்போட்டியில் திங்கள்கிழமை ஹிமாசல பிரதேசத்தின் இளம் வீரா் அபினாஷ் ஜம்வாலிடம் நடப்பு வெல்டா்வெயிட் சாம்பியன் சிவ தாப்பா அதிா்ச்சித் தோல்வியடைந்தாா். ஏற்கெனவே அபினாஷ் யூத் உலக சாம்பியன் வன்ஷாஜ் குமாரை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
10 எடைப் பிரிவுகளில் 8-இல் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது சா்வீஸஸ். சச்சின் சிவாச் 55-60 கிலோ, லக்ஷயா சஹாா் 75-80 கிலோ, ஜடுமனி சிங், ஹிதேஷ், தீபக், ஜுக்னு, விஷால் உள்ளிட்டோா் இறுதிக்குள் நுழைந்துள்ளனா்.
பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 300 வீரா்கள் பங்கேற்றுள்ளனா். பரிசளிப்பு விழாவில் பிஎஃப்ஐ தலைவா் அஜய் சிங், ஒலிம்பியன் விஜேந்தா் குமாா், உலக சாம்பியன் சவிட்டி போரா பங்கேற்கின்றனா்.