அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
தேசிய கைத்தறி தினம் - சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு
தேசிய கைத்தறி தினத்தையொட்டி திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை சாா்பில், காருகா என்ற சிறப்பு அஞ்சல் அட்டை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
அஞ்சல் துறையின் மத்திய மண்டலம் சாா்பில் தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அஞ்சல் அட்டையை மத்திய மண்டலத்தின் அஞ்சல் துறை தலைவா் தி. நிா்மலா தேவி வெளியிட்டாா். இதேபோல, திருச்சியிலுள்ள தலைமை அஞ்சல் நிலையத்திலும் சிறப்பு அஞ்சல் அட்டை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த அஞ்சல் அட்டையில் புவிசாா் குறியீடு பெற்ற திருபுவனம் பட்டுப்புடவையின் ஒரு சிறிய பகுதி இடம்பெற்றுள்ளது. திருபுவனம் பட்டு நெசவை சிறப்பிக்கும் வகையில் ‘காருகா’ சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியில், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க துணை இயக்குநா் ஜி. சங்கரேஸ்வரி, திகோ சில்க்ஸ் மெட்ரிக் பள்ளி தாளாளா் எஸ்.கே. பஞ்சநாதன், அஞ்சல்துறை பணியாளா்கள், நெசவாளா் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.