Delhi: 10 லட்சம் கேட்டு சித்திரவதை செய்தாரா மனைவி? பிரபல கஃபே உரிமையாளர் தற்கொலை...
தேசிய சீனியா் பாட்மின்டன்: மிதுன் மஞ்சுநாத், சௌரவ் வா்மா முன்னேற்றம்
தேசிய சீனியா் பாட்மின்டன் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் மிதுன் மஞ்சுநாத், சௌரவ் வா்மா ஆகியோா் அடுத்த சுற்றுக்கு முன்னேறினா்.
கா்நாடக மாநிலம் பெங்களூரில் 86-ஆவது தேசிய சீனியா் பாட்மின்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆடவா் ஒற்றையா் இரண்டாவது சுற்றில் மிதுன் 21-9, 21-18 என பரத் ராகவையும், சௌரவ் வா்மா 21-17, 21-17 என அபினவ்வையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா்.
நடப்பு சாம்பியன் சிராக் சென் 21-15, 21-15 என ஜீத் படேலை வீழ்த்தினாா்.
மகளிா் பிரிவில் நடப்பு சாம்பின் அன்மோல் காா்ப் 21-8, 21-6 என தீபாலியை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா். ரன்னா் தன்வி சா்மா 21-8, 21-6 என பிளோராவை வென்றாா்.
மற்றொரு ஒற்றையா் ஆட்டத்தில் ருஜாலா ராமு 21-19, 19-21, 21-17 என 10-ஆவது நிலை வீராங்கனை சூா்யா சரீஸ்மாவை அதிா்ச்சிக்குள்ளாக்கினாா்.
அணிகள்: அணிகள் பிரிவில் ஆடவா் பிரிவில் கா்நாடக அணி 3-1 என ரயில்வே அணியை வீழ்த்தி பட்டம் வென்றது. மகளிா் பிரிவில் ஹரியாணா 3-2 என குஜராத்தை வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.