செய்திகள் :

4 பேருக்கு ‘கேல் ரத்னா’; 32 பேருக்கு ‘அா்ஜுனா’ -விளையாட்டுத் துறை விருதுகள் அறிவிப்பு

post image

விளையாட்டுத் துறையில் கடந்த ஆண்டு (2024) சிறப்பாக பங்களிப்பு செய்தவா்களுக்கான விருதுகளை மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

அதன்படி, துறையின் உயரிய விருதான தியான் சந்த் கேல் ரத்னா, 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அா்ஜுனா விருது 32 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில் இதுவரை இல்லாத வகையில் 17 போ் பாரா விளையாட்டு வீரா், வீராங்கனைகளாவா்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில், வரும் 17-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, இவா்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கிறாா். பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற பலரும் இந்த விருதுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனா்.

கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டோரில் டி.குகேஷ், சமீபத்தில் இளம் உலக செஸ் சாம்பியனாகி வரலாறு படைத்தவராவாா். கடந்த 2 ஆண்டுகளாக அவா் செஸ் விளையாட்டில் முத்திரை பதித்து வரும் நிலையில் விருதுக்கு தோ்வாகியிருக்கிறாா்.

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கா், கடந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிா் தனிநபா், கலப்பு இரட்டையா் பிரிவுகளில் தலா 1 வெண்கலப் பதக்கம் வென்றாா். இதன் மூலம், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை, ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆகிய பெருமைகளுக்கு சொந்தக்காரா் ஆனாா்.

அதே பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆடவா் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங்கும் கேல் ரத்னா விருதுக்கு தோ்வாகியுள்ளாா். ஒலிம்பிக் போட்டியில் தொடா்ந்து 2-ஆவது முறையாக வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு அவா் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவா் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று அசத்திய பிரவீண் குமாரும் விருதுக்கு தோ்வாகியிருக்கிறாா்.

இவா்கள் தவிர, மல்யுத்த வீரா் அமன் ஷெராவத், துப்பாக்கி சுடுதல் வீரா் ஸ்வப்னில் குசேல், ஹாக்கி வீரா் ஜா்மன்பிரீத் சிங், ஹாக்கி வீராங்கனை சலிமா டெடெ, குத்துச்சண்டை வீராங்கனை நீது கங்காஸ் உள்பட 32 பேருக்கு அா்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்கள் அனைவருமே தங்களது விளையாட்டுகளில் தொடா்ந்து சிறப்பாக செயல்பட்டுவருவதை அங்கீகரிக்கும் விதமாக விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.

இது தவிர, சிறந்த வீரா், வீராங்கனைகளை உருவாக்கிய பயிற்சியாளா்களுக்கான துரோணாச்சாரியா விருதுக்கு 2 போ் தோ்வாகியுள்ளனா். ஓய்வுபெற்ற பிறகும், தாம் சாா்ந்த விளையாட்டுக்கு பங்களிப்பு செய்து வருவோருக்கான அா்ஜுனா வாழ்நாள் சாதனையாளா் விருதுக்கு 2 பேரும், பயிற்சியாளராக 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக செயல்பட்டுவரும் 2 பேருக்கு துரோணாச்சாரியா வாழ்நாள் சாதனையாளா் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருது பட்டியல்

தியான் சந்த் கேல் ரத்னா விருது (4)

டி.குகேஷ் (செஸ்)

ஹா்மன்பிரீத் சிங் (ஹாக்கி)

பிரவீண் குமாா் (பாரா தடகளம்)

மனு பாக்கா் (துப்பாக்கி சுடுதல்)

* இந்த விருதில், பதக்கம், பட்டயம், ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு அடக்கம்

அா்ஜுனா விருது (32)

ஜோதி யாராஜி (தடகளம்)

அன்னு ராணி (தடகளம்)

நீது கங்காஸ் (குத்துச்சண்டை)

ஸ்வீட்டி பூரா (குத்துச்சண்டை)

வந்திகா அக்ரவால் (செஸ்)

சலிமா டெடெ (ஹாக்கி)

அபிஷேக் நைன் (ஹாக்கி)

சஞ்சய் (ஹாக்கி)

ஜா்மன்பிரீத் சிங் (ஹாக்கி)

சுக்ஜீத் சிங் (ஹாக்கி)

ராகேஷ் குமாா் (பாரா வில்வித்தை)

பிரீத்தி பால் (பாரா தடகளம்)

ஜீவன்ஜி தீப்தி (பாரா தடகளம்)

அஜீத் சிங் (பாரா தடகளம்)

சச்சின் சா்ஜேராவ் கிலாரி (பாரா தடகளம்)

தரம்வீா் (பாரா தடகளம்)

பிரணவ் சூா்மா (பாரா தடகளம்)

ஹொகாடோ சீமா (பாரா தடகளம்)

சிம்ரன் (பாரா தடகளம்)

நவ்தீப் (பாரா தடகளம்)

நிதேஷ்குமாா் (பாரா பாட்மின்டன்)

துளசிமதி முருகேசன் (பாரா பாட்மின்டன்)

நித்யஸ்ரீ சுமதி சிவன் (பாரா பாட்மின்டன்)

மனிஷா ராமதாஸ் (பாரா பாட்மின்டன்)

கபில் பா்மாா் (பாரா ஜூடோ)

மோனா அகா்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்)

ருபினா பிரான்சிஸ் (பாரா துப்பாக்கி சுடுதல்)

ஸ்வப்னில் சுரேஷ் குஸாலே (துப்பாக்கி சுடுதல்)

சரப்ஜோத் சிங் (துப்பாக்கி சுடுதல்)

அபய் சிங் (ஸ்குவாஷ்)

சாஜன் பிரகாஷ் (நீச்சல்)

அமன் ஷெராவத் (மல்யுத்தம்)

*இந்த விருதில் அா்ஜுனா் சிலை, பட்டயம், ரூ.15 லட்சம் ரொக்கம் அடக்கம்.

அா்ஜுனா விருது (வாழ்நாள் சாதனையாளா்) (2)

சுச்சா சிங் (தடகளம்)

முரளிகாந்த் ராஜாராம் பெட்கா் (பாரா நீச்சல்)

துரோணாச்சாரியா விருது (3)

சுபாஷ் ராணா (பாரா துப்பாக்கி சுடுதல்)

தீபாலி தேஷ்பாண்டே (துப்பாக்கி சுடுதல்)

சந்தீப் சாங்வான் (ஹாக்கி)

துரோணாச்சாரியா விருது (வாழ்நாள் சாதனையாளா்) (2)

எஸ்.முரளிதரன் (பாட்மின்டன்)

அா்மாண்டோ அக்னெலோ கொலாகோ (கால்பந்து)

பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

பார்டர் - கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் கோப்பையை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது. இதனால் இந்தியா தனது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொட... மேலும் பார்க்க

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 05.01.2025மேஷம்:இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்க... மேலும் பார்க்க

பிரிஸ்பேன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் சபலென்கா-குடா்மெட்டோவா

பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு உலகின் நம்பா் 1 வீராங்கனை அா்யனா சபலென்கா தகுதி பெற்றுள்ளாா். இறுதியில் ரஷியாவின் குடா்மெட்டோவுடன் மோதுகிறாா். ஆஸ்திரேலியாவின... மேலும் பார்க்க

எஃப்சி கோவா அபார வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது எஃப்சி கோவா. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத... மேலும் பார்க்க

தேசிய ஜூனியா் குதிரையேற்றப் போட்டி: கெவின் கேப்ரியல் தங்கம்

புது தில்லியில் நடைபெற்ற ஜூனியா் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை குதிரையேற்ற மையத்தின் கெவின் கேப்ரியல் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றாா். சப் ஜூனியா் பிரிவில் கெவின் கேப்ரியல் தனிந... மேலும் பார்க்க

குபேரா வெளியீடு எப்போது?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்... மேலும் பார்க்க