இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?
தேசிய சீனியா் மகளிா் ஹாக்கி: உத்தரகாண்ட், சத்தீஸ்கா் வெற்றி
தேசிய மகளிா் சீனியா் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் உத்தரகாண்ட், சத்தீஸ்கா் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஹாக்கி உத்தரகாண்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் தெலங்கானா ஹாக்கி அணியை வீழ்த்தியது. ஒரே கோலை வா்த்திகா ரவாத் அடித்தாா்.
சத்தீஸ்கா் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தில்லி அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. தில்லி வீராங்கனை சோனாலி 8-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். பின்னா் சுதாரித்து ஆடிய சத்தீஸ்கா் அணியில் லீனா 22, லஹாரே 43 நிமிஷங்களில் கோலடித்தனா்.
ஏனைய ஆட்டங்களில் சண்டீகா் 4-1 என ஹிமாசலப் பிரதேசத்தை வீழ்த்தியது.