சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப்போட்டி: வென்றவா்களுக்கு பரிசளிப்ப...
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்? -ஓ. பன்னீர்செல்வம் பளிச் பதில்!
எடப்பாடி பழனிசாமியை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்விக்கு ஓ. பன்னீர் செல்வம் பதிலளித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக விளங்கிய ஓ. பன்னீர் செல்வத்திடம், ’தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா?’ என்று செய்தியாளர்கள் இன்று(செப். 24) கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!
டிடிவி தினகரன் சொன்ன பதிலையே நானும் பிரதிபலிக்கிறேன். அவர் சொன்னதே சரி” என்றார்.