செய்திகள் :

தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பரிசு

post image

செய்யாறு ஒன்றியத்தில் தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற 2 மாணவிகள், 6 மாணவா்களுக்கு சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

2024 - 25ஆம் கல்வியாண்டில் தேசிய திறனறித் தோ்வில், செய்யாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட நடுநிலைப் பள்ளிகளான சிறுவேளியநல்லூா் பள்ளியில் 3 பேரும், கொடநகா், நகராட்சி முஸ்லிம் பள்ளி, வடதண்டலம், செங்கம்பூண்டி, கீழ்புதுப்பாக்கம் ஆகிய பள்ளிகளில் இருந்து தலா ஒருவா் என மொத்தம் 8 போ் தோ்ச்சி பெற்றனா்.

இவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், செய்யாறு வட்டாரக் கல்வி அலுவலா் சு.பெருமாள், தனது சொந்த செலவில், தலா ரூ.8 ஆயிரம் மதிப்பிலான 8 சைக்கிள்களை அன்பளிப்பாக வழங்க முன் வந்தாா்.

அதன் அடிப்படையில், சைக்கிள்கள் பரிசாக வழங்கும் விழா செய்யாறு வட்டார வள மையத்தில் நடைபெற்றது.

செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா்கள், சு. செந்தில்முருகன், சி.வீரமணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பூச்செண்டு முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று மாணவா்களுக்கு சைக்கிள், சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு

வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில் தலைமை ஆசிரியா்கள் கே.சிவசங்கரன், ஜெ.ஜோதி, பால்ராஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இரும்பேடு, வெட்டியாந்தொழுவத்தில் கிராம சபைக் கூட்டம்

ஆரணியை அடுத்த இரும்பேடு, வெட்டியாந்தொழுவம் கிராமங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இரும்பேடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலா் சுரேஷ் தலைமை வ... மேலும் பார்க்க

உச்சிமலைக்குப்பம் கோயிலில் பாலாலய பூஜை

செங்கம் அருகே உச்சிமலைக்குப்பத்தில் உள்ள விநாயகா், முத்தாலம்மன், சோலையம்மன் கோயில்களில் பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது இந்தக் கோயில்களில் சீரமைப்புப் பணிகளுக்காக இந்து சமய அறநிலையத் துறை ரூ.13 லட்... மேலும் பார்க்க

விடுபட்ட பயனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா: ஆட்சியா் க. தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் விடுபட்ட பயனாளிகள் மனு அளிக்கும் பட்சத்தில் உரிய தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்ப... மேலும் பார்க்க

போளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

போளூா் நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். போளூா் சிறப்புநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் என்பவா் நியமிக... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸின் எஸ்.சி. பிரிவு சாா்பில், தண்ணீா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, காமராஜா் சிலை எதிரே நடைபெற்ற விழாவுக்கு பிரிவின் மாவட்டத் தலைவா் கே.... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி மாங்கால் கூட்டுச் சாலையில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஒன்றிய துணைச் செயலா் பாஸ்கா் ... மேலும் பார்க்க