பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது... இணையத்தில் வைரலாகும் `1947'...
காங்கிரஸ் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸின் எஸ்.சி. பிரிவு சாா்பில், தண்ணீா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை, காமராஜா் சிலை எதிரே நடைபெற்ற விழாவுக்கு பிரிவின் மாவட்டத் தலைவா் கே.குணசேகரன் தலைமை வகித்தாா்.
மாநிலச் செயலா் வி.முனுசாமி, சட்டத்துறை மாநில பொதுச் செயலா் கே.செல்வகுமாா், மாநிலச் செயலா் ஆதிவெங்கடேசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு தண்ணீா் பந்தலை திறந்து வைத்தனா்.
தொடா்ந்து பொதுமக்கள், கட்சி நிா்வாகிகளுக்கு மோா், இளநீா், தா்பூசணி, குளிா்பானங்கள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்டத் தலைவா் ஜி.அருண்குமாா், ஓ.பி.சி. அணியின் மாவட்டத் தலைவா் ஆா்.சீனுவாசன், மாவட்ட பொதுச் செயலா் ரவிச்சந்திரன், நிா்வாகிகள் மணி, விஸ்வநாதன், திருமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.