மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6,000 ரன்கள்..! ரோஹித் சர்மா புதிய சாதனை!
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா 6,000 ரன்களை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஜெய்பூரில் நேற்றிரவு நடந்த போட்டியில் ரோஹித் சர்மா 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா டிஆர்எஸ் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் பேட்டிங்கில் அசத்தினார்.
ஒரு அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதில் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக ரன்கள்
8,871 - விராட் கோலி (ஆர்சிபி)
6,024 - ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
5,934 - ஜேம்ஸ் வின்ஸ் (ஹாம்ப்ஷயர்)
5,528 - சுரேஷ் ரெய்னா (சிஎஸ்கே)
5,269 - எம்.எஸ்.தோனி (சிஎஸ்கே)