பதுங்குமிடங்களைத் தயாா்படுத்தும் எல்லையோர மக்கள்! பாகிஸ்தான் 8-ஆவது நாளாக துப்பா...
நடிகர் விஷ்ணு பிரசாத் காலமானார்!
மலையாள நடிகர் விஷ்ணு பிரசாத் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
மலையாளத்தில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையின் மூலம் அறியப்பட்ட நடிகரானவர் விஷ்ணு பிரசாத். இவர் பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். காசி, கை ஏந்தும் தூரத்து, லோகநாதன் ஐஏஎஸ் உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.
தொடர்ந்து, சீரியல்களில் நடித்து வந்த விஷ்ணு பிரசாத் சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் உடல் நலமிழந்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சைக்காக விஷ்ணு பிரசாத்தின் மகள் தன் கல்லீரலில் ஒரு பகுதியைக் கொடுக்க முன்வந்தும் நிலைமை மோசமடைந்ததால் விஷ்ணு இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அவர் மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: தக் லைஃப் டிரைலர் தேதி!