செய்திகள் :

பீர் பாட்டில்களால் கட்டப்பட்ட புத்தர் கோயில்; தாய்லாந்தின் இந்த Offbeat இடத்திற்குச் செல்ல ரெடியா?

post image

உலகம் முழுதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாகத் தாய்லாந்து உள்ளது. தாய்லாந்தில் பார்ப்பதற்குப் பல இடங்கள் உள்ளன. ஆனால் இந்தப் பதிவில் தாய்லாந்து ஆஃப் பீட் இடம் பற்றிச் சொல்லப் போகிறோம்.

காலி பீர் பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்ட கோயில் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வருகிறது.

தாய்லாந்து சிசகெட் மாகாணத்தின் குன் ஹான் மாவட்டத்தில் அமைந்துள்ள புத்தர் கோயில் (Wat Pa Maha Chedi Cave) கிட்டத்தட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான காலி பீர் பாட்டிலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாட்டில்களை 1984 ஆம் ஆண்டிலேயே புத்தத் துறவிகள் சேகரிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் கோயிலின் கட்டுமானம் தொடங்கியுள்ளது.

Wat Pa Maha Chedi Cave
Wat Pa Maha Chedi Cave

கண்ணாடிப் பாட்டில்கள் கொண்டு இந்த கோயிலை உருவாக்கியுள்ளனர். முழு கோயிலும் கண்ணாடிப் பாட்டில்கள் மட்டுமே பயன்படுத்திக் கட்டப்படவில்லை.

கான்க்ரீட் மட்டும் பிற கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பீர் பாட்டில்கள் இந்த கோயிலில் முக்கிய கட்டுமான பொருளாக உள்ளது.

இந்த 1.5 மில்லியனுக்கும் அதிகமான பாட்டில்களைச் சேகரிப்பதற்கு உள்ளூர் அரசாங்கம், துறவி மற்றும் தன்னார்வலர்களின் பங்குகளும் இருந்திருக்கின்றன.

கோவில் வளாகத்திற்குள் இருக்கும் பிரார்த்தனை அறைகள் பொது குளியல் அறைகள், தண்ணீர் கோபுரம் எனப் பல வசதிகள் கண்ணாடிப் பாட்டில்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வண்ணமயமான கண்ணாடி வழியாகச் சூரிய ஒளியைப் பார்க்க அழகாக இருக்கும். சுற்றுலாப் பயணிகள் இந்த கோயிலில் தனித்துவமான அனுபவத்தைப் பெறுகின்றனர்.

இதன் கட்டுமானத்திற்காகவே இந்த கோயில் சுற்றுலாப் பயணிகளிடம் ஒரு பிரபலமான ஈர்ப்பாக உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Travel Contest : அந்நியமான மண்ணிலும் என் இறைவனின் வடிவம்! - அலாஸ்கா பனி மலையின் பேரழகு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : இந்தியாவின் சோட்டா காஷ்மீர்! - மும்பையின் அழகு நிறைந்த `ஆரே காலனி'

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : பரவச அனுபவம்! - காவிரியில் அற்புதமான ஒரு சாகச சவாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : கால்பந்து காதல், நிதானமான மக்கள், மயக்கும் உணவு! - போர்ச்சுகல் கொடுத்த அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : எரிச்சலூட்டிய சிங்கப்பூர் அதிகாரி, ஆனாலும் இங்கு நேர ஒழுங்கு சூப்பர்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: கடுங் குளிர், தங்க நகரம், பிரமாண்ட கோட்டை! - ஜெய்சால்மர் பாலைவன பூமியின் அழகியல்