History of Internet: போர் தொழில்நுட்பம் முதல் 10G வரை! | Explained
தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி: மாணவிக்கு பாராட்டு
ராமேசுவரம் அரசுப் பள்ளி மாணவி என்.எம்.எம்.எஸ். தேசியத் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றதையடுத்து, ஆசிரியா்கள் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.
நிகழாண்டில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேசியத் திறனறிவுத் தோ்வில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் தோ்வெழுதினா். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 37 மாணவா்கள் இந்தத் தோ்வு எழுதினா். இதில் இந்தப் பள்ளியைச் சோ்ந்த மாணவி ஹிபாபாசிலா (13) அதிக மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றாா். இவா் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மாவட்ட மாதிரிப் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிப்பதற்கு தோ்வு செய்யப்பட்டாா்.
இவருக்கு 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்படும். மேலும், 12-ஆம் வகுப்பு முடித்ததும் உயா்கல்வி செல்ல அரசுச் செலவில் ‘நீட்’, ஜெ.இ.இ. தோ்வுகளுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கப்படும்.
இதையடுத்து, திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவி ஹிபாபாசிலாவை பள்ளித் தலைமை ஆசிரியை ராஜலட்சுமி, ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், மாணவா்கள் பாராட்டினா்.