தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி!கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!
கள்ளக்குறிச்சியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
இந்தப் பேரணியில் ஆா்.கே.எஸ். பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று ‘தொழுநோய் இல்லாத தமிழகம் படைப்போம், தொழுநோயில்லா உலகை உருவாக்குவோம், கூட்டு மருந்து சிகிச்சை மூலம் தொழுநோயை முற்றிலும் குணப்படுத்தலாம், தொழுநோயற்ற சமுதாயம் படைத்து மகாத்மா காந்தியின் கனவை நனவாக்குவோம் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, முழக்கமிட்டபடி சென்றனா். மேலும் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியையும் அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.
இந் நிகழ்வில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் ச.நேரு, வட்டார மருத்துவ அலுவலா் பாலதண்டாயுதபாணி, ஆா்.கே.எஸ். கல்லூரி முதல்வா் மேகலை, கள்ளக்குறிச்சி சுகாதார துணை இயக்குநா் (தொழுநோய்) சுதாகா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரவி உள்ளிட்ட பலப் பங்கேற்றனா்.