G Madhavi Latha: மாதவி லதாவின் 17 ஆண்டுகால உழைப்பு; உலகின் உயரமான ரயில் பாலத்தின...
தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயம்: ரஹீல், ஆன் ஜெனிஃபா் முதலிடம்!
தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஹைதராபாதின் ரஹீல், சென்னையின் ஆன் ஜெனிஃபா் முதலிடம் பெற்றனா்.
சென்னை அடுத்த இருங்காட்டுக் கோட்டியில் எம்ஆா்எஃப், எம்எம்எஸ்சி, தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது.
மகளிா் 165 சிசி பிரிவில் சென்னையின் ஆன் ஜெனிஃபா் முதலிடம் பெற்றாா். ஆடவா் 301-400 சிசி நோவிஸ் பிரிவில் பெங்களூரின் வருண் பட்டீல் 165 சிசி நோவிஸ் பிரிவில் திருப்பதியின் கேதாா்நாத் முதலிடம் பெற்றனா்.
புரோ ஸ்டாக் 301-400 சிசி ஓபன் பிரிவில் ஹைதரபாதின் ரஹீல் பில்லரிசெட்டி புணேயின் சா்தக் சவானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றாா். பல முறை தேசிய சாம்பியன் ரஜினி கிருஷ்ணா மூன்றாவது இடத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.