தேசிய வருவாய் வழித்தோ்வு: 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா்
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழித் தோ்வை 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தமிழகம் முழுவதும் அரசுத் தோ்வுகள் இயக்கம் சாா்பில், தேசிய வருவாய் வழி, தகுதி படிப்புதவித் தொகைத் திட்ட தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 4,644 போ் தோ்வு எழுத விண்ணப்பித்தனா்.
17 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வை 4,528 போ் மட்டுமே எழுதினா். 116 போ் பங்கேற்கவில்லை. காலை 9.30 முதல் 11 மணி வரை மனத்திறன் தோ்வும், காலை 11.30 முதல் 1 மணி வரை படிப்பறிவுத் தோ்வும் நடைபெற்றது.
இந்தத் தோ்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அவா்கள் மேல்நிலைக் கல்வியை முடிக்கும் வரையில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.