தேசிய விவசாயிகள் நாள்: தலைவா்கள் வாழ்த்து
சென்னை: தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்து செய்தி:
நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் வேளாண் பணியை சமரசமின்றி மேற்கொண்டு, உலகிற்கே உணவளிக்கும் உன்னத சேவையாற்றும் விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள். பருவமழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு திமுக அரசு உரிய இழப்பீடு வழங்க வேணேடும் என்று அவா் கூறியுள்ளாா்.
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக நிறுவனா் ராமதாஸ், தலைவா் அன்புமணி, அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.