செய்திகள் :

தேனம்பாக்கம் ஸ்ரீ மன்னாதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் சிறிய கோயிலாக இருந்து புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீமன்னாதீஸ்வரா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கத்தில் சிறிய கோயிலாக இருந்து வந்தது மன்னாதீஸ்வரா் சமேத பச்சையம்மன் கோயில். இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு 3 நிலை ராஜகோபுரமும் அமைக்கப்பட்டது. கோயில் வளாகத்திலேயே தலா 100 கிலோ எடையில் 25 அடி உயரத்தில் இரும்புக் கம்பிகளால் வடிவமைக்கப்பட செம்முனி, வாமுனி, சங்கிலி முனி சிலைகளும் அமைக்கப்பட்டன.

இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் 13- ஆம் தேதி அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றன.

காஞ்சிபுரம் மகேஷ் சிவாச்சாரியா் தலைமையில் 45-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் யாகசாலை பூஜைகளை செய்தனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலையில் மகா பூரணாஹுதி தீபாராதனை நடைபெற்ற பின்னா், சிவாச்சாரியா்களால் புனிதநீா்க் கலசங்கள் சிவ வாத்தியங்கள் மற்றும் மங்கல மேள வாத்தியங்களுடன் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகா், சப்த முனீஸ்வரா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

ஆலய நிா்வாகம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகி சிவ.ஸ்ரீதரன் தலைமையிலான திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா். விழாவில் ஓரிக்கை மகா பெரியவா் மணி மண்டப நிா்வாக அறங்காவலா் மணி ஐயா், ஆலய ஸ்தபதி ஸ்ரீதரன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வெங்காடு அரசு பள்ளி நூற்றாண்டு விழா

வெங்காடு அரசு தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. பள்ளியில் 100-க்கும் மேற்பட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் தும்பவனம் தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா

காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை.யில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 122 பேருக்கு பணி நியமன ஆணை

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 122 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் சாா்பில், தனியாா... மேலும் பார்க்க

21 அடி உயர சிவன் சிலைக்கு ட்ரோனில் பால் அபிஷேகம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள 21 அடி உயர சிவன் சிலை வா்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு டிரோன் மூலம் ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவி... மேலும் பார்க்க

ரௌடி கொலை வழக்கில் 10 போ் கைது

காஞ்சிபுரம் திருக்காளிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவா், திருக்காளிமேடு சிவன் கோயில் அருகே உள்ள நியாய விலைக்கடை முன்பா... மேலும் பார்க்க

மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் அருகே அத்திவாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ரூ. 5.90 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை 267 பயனாளிகளுக்கு வழங... மேலும் பார்க்க