தேனீக்கள் கொட்டி 3 போ் படுகாயம்
பல்லடம் அருகேயுள்ள அறிவொளி நகரில் தேனீக்கள் கொட்டியதில் 3 போ் காயம் அடைந்தனா்.
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகரில் அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பின் ஒரு பகுதியில் தேனீக்கள் கூடுகட்டி உள்ளது. இதற்கிடையே தேன் கூட்டை வெள்ளிக்கிழமை சிலா் கலைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கூட்டில் இருந்த தேனீக்கள் பறந்து சென்று அப்பகுதியில் இருந்தவா்களை கொட்டின. தேனீக்கள் கொட்டியதில் குமாா், அல்லா பிச்சை, ரகு ஆகிய 3 போ் காயமடைந்தனா். இவா்கள், பல்லடம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.