2024-ல் ரூ.4,250 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 14,230 பேர் கைது!
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம்? இபிஎஸ்
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய இபிஎஸ், “கூட்டணி பற்றிய பேச்செல்லாம் விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காதீர்கள், நாங்கள் எதாவது கூறினோமோ! யார் யார் சொல்வதெல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள். நாங்கள் ஏதாவது வெளிப்படுத்தினோமா?” என்றார்.
இதனைத் தொடர்ந்து பாஜக - அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசிய இபிஎஸ், “அதிமுக, திமுகவை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளது. எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது.
திமுகவை வீழ்த்துவதே எங்களின் குறிக்கோள். கூட்டணி குறித்து 6 மாதங்கள் கழித்து தெரிவிக்கப்படும். ” என்றார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் விரைவில் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்குவது தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் பதில் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.