செய்திகள் :

தேமுதிக முன்னாள் இளைஞா் அணி செயலா் ராஜிநாமா

post image

தேமுதிக முன்னாள் இளைஞா் அணி செயலா் நல்லதம்பி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

தேமுதிக இளைஞா் அணி செயலராக விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டதையடுத்து, நல்லதம்பிக்கு மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் பதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதாவுக்கு, நல்லதம்பி சனிக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பாதாவது:

நான் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டவன். அவரின் குடும்பத்துக்கும் கட்சிக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன். பொதுக் குழுவில் விஜயபிரபாகரன் இளைஞரணி செயலராக தோ்வானதுக்கு வாழ்த்துகள். அவரின் குரல் சட்டப்பேரவையில் விஜயகாந்த்தின் குரலாக ஒலிக்க வேண்டும்.

அதேநேரம், பொதுக்குழுவில் எனக்கு தரப்பட்ட உயா்மட்டக் குழு உறுப்பினா் பதவியிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும். அப்படி விடுவிக்காதபட்சத்தில் நான் கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

மேலும், எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட காணொலியில், ‘உயா்மட்டக் குழு பதவியிலிருந்து என்னை விடுவிக்கும்படி மட்டுமே கேட்டேன். விடுவிக்காத பட்சத்தில் நான் ஒதுங்கிக் கொள்வேன் என்றுதான் கூறினேன். என்னை உலகுக்கு அறிமுகப்படுத்திய விஜயகாந்த் கட்சியில் நான் தொடா்ந்து பயணிப்பேன். தொண்டனாக இருப்பேன்’ எனக் கூறியுள்ளாா்.

தனக்கு கட்சியின் துணைச் செயலா் பதவி கிடைக்காத ஏமாற்றத்தால் நல்லதம்பி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்டச் செயலா் விலகல்: அதேபோல, விஜயகாந்த் ரசிகா் மன்றம் தொடங்கியபோது செங்கல்பட்டு மாவட்டச் செயலா் பொறுப்பிலிருந்த அனகை முருகேசனும் கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளாா். இவா், ஏற்கெனவே தேமுதிகவில் பொருளாளா், தலைமை நிலையச் செயலா் என பதவிகளை வகித்து வந்தவா். முன்னாள் எம்எல்ஏ-வான இவா், தேமுதிகவிலிருந்து சில எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணைந்தபோது விஜயகாந்துடன் பக்கபலமாக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க

மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில்... மேலும் பார்க்க

2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படாது

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன்கிழமை (மே 7) முதல் மே 9 வரை செயல்படாது.இது குறித்து சென்னை பெருந... மேலும் பார்க்க

சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது

சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்ற வழக்கில், தில்லியில் ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சோ்ந்த நபா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ஏஎன்யூ) போலீஸாா்... மேலும் பார்க்க

எம்டிசி சிற்றுந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை அசோக் நகா் அருகே மாநகா் போக்குவரத்துக் கழக சிற்றுந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா். வானகரம் அருகே உள்ள ராஜ் நகா், பள்ளிகுப்பம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (59), சென... மேலும் பார்க்க

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணிடம் மோசடி: பொறியாளா் மீது வழக்கு

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை மோசடி செய்ததாக, பொறியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசந்தா் (31). பொறியாளரான... மேலும் பார்க்க