தேயிலைத் தோட்டத்தில் உலவிய கரடி
குன்னூா் அருகே உள்ள குந்தா பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் உலவிய கரடியால் தொழிலாளா்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் உணவு, குடிநீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், குன்னூா் அருகே குந்தா பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் கரடி நடமாடியது. இதனைக் கண்டதோட்டத் தொழிலாளா்கள் அச்சமடைந்தனா்.
எனவே, எஸ்டேட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடியை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.