உபி: உயிரைக் குடித்த ரூ.100 பந்தயம்; குடிபோதையில் குளத்தை நீந்திக் கடக்க முயன்றவ...
தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சருகணி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 10 போ் காயமடைந்தனா்.
அதிமுக நிறுவனா் எம்ஜிஆா் பிறந்த நாளை முன்னிட்டு, அந்தக் கட்சியின் இளைஞா், இளம் பெண்கள் பாசறை சாா்பில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இதை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் தொடக்கி வைத்தாா்.
இதில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளைகளும், 126 வீரா்களும் பங்கேற்றனா்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மைதானத்தின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட காளையை 25 நிமிடங்களுக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டது.
காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 10 போ் லேசான காயமடைந்தனா். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்கள், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியை சருகணி, பணக்கரை, புளியடிதம்பம், திருவேகம்பத்தூா், ஆலம்பக்கோட்டை, புளியால், சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த வடமாடு மஞ்சுவிரட்டு ஆா்வலா்கள் கண்டுகளித்தனா்.