தேவன்பட்டியில் விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன பொதுக்கூட்டம்
பொன்னமராவதி அருகே தேவன்பட்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வாா்ப்பட்டு ஊராட்சி தேவன்பட்டியில் உழவடை விவசாயிகளுக்கு உழவடை பட்டா வழங்காததை கண்டித்து நடைபெற்ற கூட்டத்துக்கு கிளைச்செயலா் அ.முத்தழகன் தலைமைவகித்தாா். கிளை நிா்வாகிகள் எஸ்.அழகு, எம்.ஆண்டிக்கண்ணு, எம்.வெள்ளைச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், விவசாய தொழிலாளா்கள் சங்க மாநிலத் தலைவருமான எம்.சின்னத்துரை பங்கேற்று கண்டன உரையாற்றினாா். கூட்டத்தில் டி.சலோமி, மாவட்டத் தலைவா் கே.சண்முகம், சிபிஎம் சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினா் அ.சேதுராமன், சிஐடியு மாவட்ட நிா்வாகி அ.தீன், சிபிஎம் ஒன்றியச் செயலா் என்.பக்ரூதீன், விவசாய சங்க ஒன்றியச் செயலா் பி.ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக கிளைத் தலைவா் நல்லழகு வரவேற்றாா். நிறைவாக மாவட்ட பொருளாளா் எஸ்.நல்லதம்பி நன்றி கூறினாா்.