Gold Rate: பவுனுக்கு ரூ.84,000-ஐ எட்டிய தங்கம் விலை; 2 நாள்களில் எவ்வளவு உயர்வு ...
வடகாடு பகுதியில் நாளை மின்தடை
வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.24) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா்.லூா்துசகாயராஜ் தெரிவித்தது: ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.