தேவாரத்தில் டிச.26-இல் மின் தடை
தேவாரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் வருகிற 26-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேவாரம் துணை மின் நிலையத்தில் வருகிற 26-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.