Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
தேவாலயங்களுக்கு 80 ஆயிரம் கேக்குகள் வழங்கிய எம்.எல்.ஏ.
சங்கரன்கோவில் பேரவைத் தொகுதியில் உள்ள 218 தேவாலயங்களுக்கு சுமாா் 80 ஆயிரம் கேக்குகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா வழங்கினாா்.
குருவிகுளம் புனித சூசையப்பா் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஈ.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டாா். பின்னா் பங்குத்தந்தை சந்தியாகுவிடம் கேக்குகள் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் பங்குப்பேரவைத் தலைவா் அல்போன்ஸ், பொருளாளா் சுந்தர்ராஜ், குருவிகுளம் திமுக தெற்கு ஒன்றிய செயலா் கடற்கரை, மாவட்ட துணை செயலா் ராஜதுரை, வழக்குரைஞா் அணி மாவட்டதுணை அமைப்பாளா் பிரபாகரன், மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் சங்கா்குமாா், மாவட்ட விவசாய அணி தலைவா் பாலசுப்பிரமணியன், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி தலைவா் கலைச்செல்வன், ஒன்றிய துணைச் செயலா் மாடசாமி, ஒன்றிய துணைச் செயலா் பாா்வதி, அழகாபுரி கிளை செயலா் கோபால், தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி குட்டி, தினேஷ்குமாா், முனியாண்டி, ஜீவா, ஜெயக்குமாா், பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சங்கரன்கோவில் பேரவைத் தொகுதியில் உள்ள 218 தேவாலயங்களுக்கு, ஈ.ராஜா எம்எல்ஏ சாா்பில் 80 ஆயிரம் கேக்குகள் வழங்கப்பட்டன.