செய்திகள் :

தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி

post image

கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா நடந்துவரும் நிலையில் இன்று (1-3-2025) மாலையில் நடைபெற்ற தேர் பவனியில் அலங்காரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியை சாலையின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, இனயம் புத்தன்துறையைச் சேர்ந்த திருவாளர்கள் விஜயன் (வயது 52) த/பெ. தனிஸ்லாஸ், சோபன் (வயது 45) த/பெ. பெர்னின், மனு (வயது 42) த/பெ. ஒஸ்மான் மற்றும் ஜெஸ்டிஸ் த/பெ. விக்டர் (வயது 35) ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

கன்னியாகுமரி: தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தோ்வு விண்ணப்பப் பதிவு: தோ்வா்களுக்கு என்டிஏ அறிவுறுத்தல்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு ஒருவா் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளி... மேலும் பார்க்க

மாம்பலம் ரயில் நிலையம் மறுசீரமைப்புப் பணி விரைவில் நிறைவடையும்: தெற்கு ரயில்வே தகவல்

மாம்பலம் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி நடப்பு மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ‘அம்ருத் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மு... மேலும் பார்க்க

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுந... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று தொடக்கம்: 8.21 லட்சம் போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்குகிறது. 8.21 லட்சம் போ் எழுதுகின்றனா். இத்தோ்வுக்கான ஆயத்த ஏற்பாடுகளை பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க

அய்யா வைகுண்டா் அவதார நாளில் மதுக் கடைகளை மூட வேண்டும்: அண்ணாமலை

அய்யா வைகுண்டா் அவதார நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: சமூகத்தில், ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை நிதிநிலை அறிக்கையுடன் தாக்கல் செய்ய முடிவு

தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை, பேரவையில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதே நாளில் (மாா்ச் 14) வெளியிடப்படவுள்ளது. மத்திய அரசின் நடைமுறையில் பொருளாதார ஆய்வறிக்கை நிதிநிலை அறிக்... மேலும் பார்க்க