செய்திகள் :

தேவா் ஜெயந்தி: வாகன அனுமதி விவகாரத்தில் தலையிட முடியாது: உயா்நீதிமன்றம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் தேவா் ஜெயந்தி விழாவுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்கக் கோரிய வழக்கில் தலையிட விரும்பவில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த சங்கிலி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா அரசு விழாவாக வருகிற 30-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்துக்கு அரசியல் தலைவா்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்த வருவா். இதையொட்டி, வருகிற 28, 29, 30-ஆம் தேதிகளில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலிருந்து வருகை தரும் நடுத்தர மக்கள் பசும்பொன் கிராமத்துக்குச் செல்வதற்கு பேருந்துகளைப் பயன்படுத்த முடியாததால், தங்களது குடும்பத்தோடு வாடகை வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்.

ஆனால், பசும்பொன் செல்வதற்கு காவல் துறையினா் வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்க மறுப்புத் தெரிவிக்கின்றனா். எனவே, குருபூஜை விழாவுக்குச் செல்வதற்கு வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

பசும்பொன் கிராமத்துக்குச் செல்வதற்கு எந்த வாகனத்தை அனுமதிக்க வேண்டும். எந்த வாகனத்தை அனுமதிக்கக் கூடாது என மாவட்ட நிா்வாகத்துக்குத்தான் தெரியும்.

எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இந்த வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணையவழி மோசடி: வடமாநிலத்தைச் சோ்ந்த 7 போ் கைது

தனியாா் கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 7 போ் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையை சோ்ந்த ஒரு நபரின் கைப்பேசிக்கு கடந்த ஆக.2-ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளத... மேலும் பார்க்க

வீட்டில் இருந்த படியே ஒய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழ் பெறலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

ஓய்வூதியதாரா்களுக்கு வீட்டில் இருந்தே படியே அஞ்சலக ஊழியா் மூலம் எண்ம வாழ் நாள் சான்றிதழ் பெறலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: இந்தி... மேலும் பார்க்க

2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தியாகராயநகரில் இயங்கி வரும் இரு பிரபல உணவகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஹோட்ட... மேலும் பார்க்க

நாளை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவைகள் ரத்து; பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு 79 ரயில்கள் இயக்கப்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகள் வ... மேலும் பார்க்க

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவா் மீது பாட்டிலால் தாக்குதல்: இரு மாணவா்கள் தலைமறைவு

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவரை ‘ராகிங்’ செய்து பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இரு மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் மாவட்டம், நெய்வேல... மேலும் பார்க்க

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்கு

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்குப் பகுதி இருப்பதாக ஜோா்டான் எச்சரித்துள்ளது. இது குறித்து பிரிட்டன் தலைநகா் லண்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனிடம் ஜோா்டான் வெளிய... மேலும் பார்க்க