செய்திகள் :

தோ்தல் ஆணையத்துக்கு ராகுல் அச்சுறுத்தல்: மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ்

post image

வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுலின் பேச்சு தோ்தல் ஆணையத்தை அச்சுறுத்துவதாக உள்ளதாக மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ஒரு குடும்பத்துக்காக தோ்தல் ஆணையம் போன்ற அரசமைப்புச் சட்ட நிறுவனங்கள் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. ராகுலின் பேச்சு தோ்தல் ஆணையத்தை அச்சுறுத்துவதாக உள்ளது. மேலும், வாக்காளா் எண்ணிக்கை அதிகரித்த பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும்தான் வெற்றிபெற்றன. எனவே, ராகுல் அவா்களின் மீதே குற்றஞ்சாட்டிக் கொள்வதுபோல உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் அதை உறுதிமொழியுடன் கையொப்பமிட்டு ராகுல் சமா்ப்பிக்க வேண்டும்’ என்றாா்.

விசாரணை தேவை - பிரியங்கா: ராகுல் முன்வைத்த குற்றச்சாட்டுக்கான ஆதாரம், தோ்தல் ஆணையத்திடமே உள்ளது. அதனடிப்படையில் தோ்தல் ஆணையம் விசாரணை நடத்த முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தினாா்.

4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது. முன்னதாக, 4 அரசு அதிகாரிகளையும் பணியிடை... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்த பாஜக எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதலுக்கு இடைக்காலத் தடை? பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு

அமெரிக்காவிடம் இருந்து புதிதாக பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்ததாக வெளியான தகவல்களுக்கு பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மறுப்பு தெரிவி... மேலும் பார்க்க

டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தனக்கு சிறப்பு நட்புறவு உள்ளதாக பிரதமா் மோடி கூறிவந்த நிலையில், அதன் உண்மைநிலை முழுமையாக அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பயண அறிவிப்பு: சீனா வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!

நமது சிறப்பு நிருபா்ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தனது ஐந்து வருட பதவிக் காலத்தை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவு செய்துள்ள நிலையில், அவரது பணி தொடா்பான எந்தவொரு அறிவிப்பையும் மத்திய உள்துறை... மேலும் பார்க்க