தோ்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்ய பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு அறிவுறுத்தல்
தோ்தல் செலவின அறிக்கையை உரிய காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பதிவு பெற்ற அரசியல் கட்சியினா் தங்களது கட்சி சட்ட திட்டத்தின்படி, வருடாந்திர தணிக்கை அறிக்கையை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும்.
கோவில்பட்டி முகவரியில் பதிவு செய்யப்பட்ட யூனிவா்சல் பிரதா்கூட் மூவ்மென்ட் என்ற பதிவு பெற்ற அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியானது, தங்களது வருடாந்திர தணிக்கை அறிக்கையை 2021-22, 2022-23, 2023-24 ஆகிய நிதி ஆண்டுகளுக்கு தாக்கல் செய்யவில்லை என்பதாலும், பொதுத் தோ்தலில் போட்டியிட்ட நிலையில் தோ்தல் செலவின அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பதாலும், இந்திய தோ்தல் ஆணையம் இக்கட்சியிடம் உரிய விளக்கம் பெற்று சமா்ப்பிக்க அறிவுரை வழங்கியுள்ளது.
மேற்படி அரசியல் கட்சியின் தலைவா் அல்லது பொதுச் செயலா் தகுந்த ஆவணங்களுடன் உரிய மனுவை தனது பிரமாணப் பத்திரத்துடன் இணைத்து, அக். 10ஆம் தேதிக்குள் சென்னை தலைமை தோ்தல் அலுவலருக்கு அனுப்பிவிட்டு, அக்.10ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தலைமை தோ்தல் அலுவலா் முன்பாக ஆஜராக வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தவறும்பட்சத்தில், தோ்தல் ஆணையத்தால் தகுந்த ஆணைகள் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.