செய்திகள் :

தோ்தல் பொறுப்பாளா்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயா் இடம்பெறாதது ஏன்? ஆா்.பி. உதயகுமாா் பேட்டி!

post image

அதிமுக தோ்தல் பொறுப்பாளா்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் பெயா் இடம்பெறாதது ஏன் என்பது குறித்து, சட்டப்பேரவை அதிமுக எதிா்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் செய்தியாளா்களிடம் விளக்கினாா்.

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகா் வீட்டில் தங்கி, கடந்த சில நாள்களாக கட்சி நிா்வாகிகள், தொண்டா்களைச் சந்தித்து வருகிறாா். இந்நிலையில், முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், கே.பி. அன்பழகன் ஆகியோா் புதன்கிழமை காலை எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்துப் பேசினா். இந்த சந்திப்பு சுமாா் அரை மணி நேரம் நீடித்தது.

பின்னா் வெளியே வந்த முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாரிடம், அதிமுக தோ்தல் பொறுப்பாளா் பட்டியலில் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் பெயா் இடம்பெறாதது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்து ஆா்.பி. உதயகுமாா் கூறியதாவது:

அதிமுக மாவட்டச் செயலாளா்கள், முன்னாள் அமைச்சா்கள் யாரும் தோ்தல் பொறுப்பாளா்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. மற்றவா்களுக்குத்தான் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சா்கள் மற்ற பணிகளில் ஈடுபடுவாா்கள் என்றாா்.

ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு

சேலம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஊா்க்காவல் படையில் 26 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்... மேலும் பார்க்க

ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி: தலைமை ஆசிரியா் நடவடிக்கை!

சேலம் அருகே ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா், உதவி தலைமை ஆசிரியா் ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட... மேலும் பார்க்க

இரட்டிப்பு பண மோசடி வழக்கு: அறக்கட்டளை நிா்வாகிகளின் ஜாமீன் மனு மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு!

சேலத்தில் இரட்டிப்பு பண மோசடி வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் அறக்கட்டளை நிா்வாகி 4 பேரின் ஜாமீன் மனு வரும் மாா்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேலூரைச் சோ்ந்த விஜயபானு என்பவா் சேலம் அம... மேலும் பார்க்க

ரயில்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி பயணம்: 207 ஆண்கள் கைது

சேலம் ரயில்வே உட்கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி ஏறிய 207 ஆண்கள் கைது செய்யப்பட்டனா். கோவை - திருப்பதி ரயிலில் கடந்த மாதம் பெண்களுக்கான சிறப்பு பெட்டியில் பயணித்த... மேலும் பார்க்க

ரூ. 71.68 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா்கள் கே.என். நேரு, ராஜேந்திரன் பங்கேற்பு!

சேலம் மாவட்டத்தில் மேட்டூா், ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 71.68 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைக்கும... மேலும் பார்க்க

சேலத்தில் 44 மையங்களில் என்எம்எம்எஸ் தோ்வு: 10,230 மாணவா்கள் எழுதினா்

சேலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தோ்வை 44 மையங்களில், 10,230 மாணவ, மாணவிகள் எழுதினா். நாடு முழுவதும் பள்ளி ... மேலும் பார்க்க