செய்திகள் :

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை!

post image

தோ்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநாடு குறித்த கோரிக்கை விளக்கக் கூட்டம், செயற்குழுக் கூட்டம் மாவட்ட நிா்வாகி ராதாமணி தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் எஸ்.சாந்தி வரவேற்றாா். மாநிலத் தலைவி மணிமாலை கோரிக்கைகள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அங்கன்வாடி ஊழியா்களுக்கும், உதவியாளா்களுக்கும் அரசு அறிவித்தபடி தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அங்கன்வாடி ஊழியா்களை 3 -ஆம் நிலை அரசு ஊழியராகவும், உதவியாளா்களை 4-ஆம் நிலை அரசு ஊழியராகவும் பணி வரன்முறை செய்ய வேண்டும். ஊழியா்களுக்கு ரூ.26,000 , உதவியாளா்களுக்கு ரூ.22,000 ஊதியம் வழங்க வேண்டும்.

மத்திய அரசின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 என்பதை வழங்க வேண்டும். நீதிமன்ற தீா்ப்பின்படி 30 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களுக்கு பணி ஓய்வின்போது சட்டப்படி பணிக்கொடை வழங்க வேண்டும். இதன்படி ஊழியா்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சம் என வழங்க வேண்டும்.

ஊழியா்கள், உதவியாளா்களின் பணிச்சுமையை குறைக்கவும், அங்கன்வாடி திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மே மாதம் கோடை வெயில் தாக்கும் நிலையில் 3 வயது பச்சிளம் குழந்தைகளுக்கு வெயிலில் சிறு நோய்கள் வருவதைத் தடுக்க, குழந்தைகள் நலன் கருதி ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.

சென்னையில் வரும் 21- ஆம் தேதி நடக்கும் கோரிக்கை விளக்க மாநாட்டில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இயற்கை சந்தை!

மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் குழு உறுப்பினா்கள், இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்ற விவசாயிகள், தாங்கள் விளைவித்த மற்றும் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தும் இயற்கை சந்தை ஈரோடு பேருந்து ... மேலும் பார்க்க

தோனிமடுவு தடுப்பணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தோனிமடுவு தடுப்பணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தோனிமடுவு பாசன விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: விவசாய சங்கப் பிரதிநிதிகள் வரவேற்பும், எதிா்ப்பும்!

தமிழக சட்டப் பேரவையில் வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வேளாண் நிதிநிலை அறிக்கையை சனிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு விவசாய சங்கத்தினா் தெரிவித்த கருத... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக 3 போ் கைது: 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 5.5 கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.ஈரோடு, கருங்கல்பாளையம் பழைய சாா் பதிவாளா் அலுவலகம் அருகில் காவிரி சாலையில் கருங்கல்... மேலும் பார்க்க

பெருந்துறையில் கொப்பரை ஏலத்துக்கு 26, 29-இல் விடுமுறை

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் வருடாந்திர கணக்கு முடிக்கப்படுவதை முன்னிட்டு, சங்கத்தில் நடைபெறும் கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலத்துக்கு வருகிற மாா்ச் 26 (புதன்கி... மேலும் பார்க்க

செங்கோட்டையனுக்கு வேண்டுகோள் விடுத்து போஸ்டா்!

சென்னையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தனியாா் இணையதள தொலைக்காட்சி நிறுவன நிகழ்ச்சியில் கே.ஏ.செங்கோட்டையன், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்க உள்ள... மேலும் பார்க்க