செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை: அண்ணாமலை

post image

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலை சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். இன்று நடைபெறும் கூட்டம் வெறும் நாடகம் மட்டும் தான். கேரளத்துக்கு சென்ற முதல்வர் தமிழ்நாடு பிரசனைக்கு குறித்து ஒரு முறை கூட பேசவில்லை. தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் கற்பனை நாடகத்தை சென்னையில் நடத்தி வருகின்றனர்.

மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவேன் எனக் கூறிய டிகே சிவகுமாருக்கு இதுவரை முதல்வர் பதில் கூட சொல்லவில்லை. தமிழக அரசின் உரிமையை முதலமைச்சர் கோட்டை விட்டுள்ளார். தமிழகத்துக்கு தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை. தற்போது உள்ள தொகுதி தான் அப்படியே இருக்க போகிறது.

யாருடன் கூட்டணி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

உத்திரப் பிரதேசத்திலும் தொகுதிகள் அப்படியே இருக்கப் போகிறது. கேரளம், கர்நாடகம் தலைவர்களிடம் தமிழகத்தின் பிரச்னைகளை முதல்வர் பேச வேண்டும். நாடகமாக இந்த கூட்டம் நடைபெற்றாலும் முதல்வர் தமிழகத்தின் உரிமைகளை பேசுவதற்கு இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை.

டாஸ்மாக் ஊழல் இந்தியாவையே உழுக்க கூடிய ஒரு ஊழலாக இருக்கும், தமிழக அரசியலைப் புரட்டிப் போடும். டாஸ்மாக்கில் இன்று நிர்ணய விலையில் சரக்கு கிடைக்கிறது என்று சொன்னால் அதற்கு பாஜக தான் காரணம், இதனை நான் பெருமையாக சொல்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை '0' என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கனிமொழி தன்னுடைய ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: அண்ணாமலை

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சா் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணா... மேலும் பார்க்க

மதுரையில் காவலர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்!

மதுரையில் காவலர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்டார். கைதான ஆட்டோ ஓட்டுநர், பணத்துக்காக காவலரை எரித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.கடந்த 19 ம... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் நியமனம்: அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பு!

சட்டப்பேரவையில் சத்துணவு ஊழியா்கள் நியமனம் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில... மேலும் பார்க்க

குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆ... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

யூடியுபர் சவுக்கு சங்கர் வீட்டில் துய்மைப் பணியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில் அந்த சம்பவத்திற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். யூடியுபர் சவுக்க... மேலும் பார்க்க