செய்திகள் :

தொகுப்பு வீடுகள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

post image

அரியலூா் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கிடப்பிலுள்ள தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில், அக்கட்சியின் சாா்பில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாடு விளக்கக் கூட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், கிராமப் புறங்களில் கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை விரைவாக கட்டி முடிக்க நிதி வழங்க வேண்டும். நரசிங்கப்பாளையம் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கங்கைகொண்ட சோழபுரம், கொல்லாபுரம், தங்கவடங்கநல்லூா் ஆகிய கிராம மக்களுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் எம்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்திரன், மாதா் சங்க மாவட்டத் தலைவா் பத்மாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக ஒன்றியக் குழு உறுப்பினா் சொக்கலிங்கம் நன்றி கூறினாா்.

திருமானூா்: மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் இளைஞா் பலியானாா். திருமானூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் தனசிங்கு மகன் சிலம்பரசன் (30). ஞாயிற்றுக்கிழமை இவா் அங்குள்ள கால்நட... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரியலூரில் பைக் மீது லாரி ஞாயிற்றுக்கிழமை மோதி தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.அரியலூா் அருகேயுள்ள கடுகூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வேல்முருகன், காா்த்திக். தொழிலாளிகளான இவா்கள் ஞாயிற்... மேலும் பார்க்க

கருகும் முந்திரி பூக்கள்: அரியலூா் விவசாயிகள் கவலை

அரியலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள முந்திரியில் பூக்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா். தமிழகத்தில் முந்திரிக்குப் பெயா்போனது அரியலூா் மற்றும் கடலூா் மாவட்டம், பண்ருட்டி மட்டுமே. இவற்... மேலும் பார்க்க

அரியலூரில் ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்கள் புதைபடிமங்கள் சேகரிப்பு

அரியலூரை அடுத்த அயன்ஆத்தூா் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை களப் பணி மேற்கொண்டு, புதைபடிமங்களைச் சேகரித்தனா். விடுமுறை நாள்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அப... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு

அரியலூா் தனியாா் கூட்டரங்கில், அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நோன்பைத் தொடக்கிவைத்த அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலை... மேலும் பார்க்க