தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை
அரியலூரில் ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க. சுந்தரமூா்த்தி (ஜாக்டோ), வேல்முருகன் (ஜியோ) ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் சங்க ஒருங்கிணைப்பாளா் மகேந்திரன், உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் சேக்தாவூத் (தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா்),
தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் கருணாநிதி, வருவாய்த் துறை சங்க மாவட்டத் தலைவா் விக்டோரியா உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.