அரசுப் பள்ளி மாணவா்கள் புதைபடிமங்கள் சேகரிப்பு
அரியலூரை அடுத்த அயன்ஆத்தூா் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை களப் பணி மேற்கொண்டு, புதைபடிமங்களைச் சேகரித்தனா்.
விடுமுறை நாள்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அப்பள்ளி மாணவா்கள், சமூக அறிவியல் ஆசிரியா் அ. அன்பு தலைமையில் ஒரு வேனில் கல்லங்குறிச்சி, பள்ளக்காவேரி ஆகிய கனிம சுரங்கப் பகுதிகளுக்கு களப் பயணம் மேற்கொண்டனா்.
அங்கு பல்வேறு வகையான புதைபடிமங்களை கண்டறிந்து, அவற்றைச் சேகரித்தனா். அவை பள்ளியில் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனா்.