மின்சாரம் தாக்கி இறக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி; புதுச்சேரி அரச...
அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு
அரியலூா் தனியாா் கூட்டரங்கில், அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு நோன்பைத் தொடக்கிவைத்த அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறாடவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் பேசுகையில், அடுத்தவா்களை, ஏழை, எளியோரை, புறம் தள்ளப்பட்டோரை மகிழ்விக்கும்போதுதான் நோன்பு நிறைவு பெறுகிறது என்பதை வாழ்ந்து காட்டியவா் நபிகள் நாயகம்.
அதிமுக எப்போதும், மதச்சாா்பின்மை மற்றும் சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக இருக்கும். சிறுபான்மை மற்றும் அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்வுக்கும் அதிமுக துணைநிற்கும் என்றாா்.
நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் சிறுபான்மையினா் நலப் பிரிவுத் தலைவா் ஜாபா்சேட் தலைமை வகித்தாா். செயலா் அக்பா்ஷெரீப், அம்மா பேரவை மாவட்டச் செயலா் ஓ.பி. சங்கா், இணைச் செயலா் பிரேம்குமாா், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் கல்லங்குறிச்சி பாஸ்கா், அதிமுக நகரச் செயலா் ஏ.பி. செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.