ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக மறியல்: 150 போ் கைது
ராணிப்பேட்டையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 150 போ் கைது செய்யப்பட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசாணை என் 243-ஐஐ ரத்து செய்ய வேண்டும், பகுதி நேர ஆசிரியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினா்.
இதனைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 ஆசிரியா்களை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.