வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: தையல் தொழிலாளி மரணம்
ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழந்தாா்.
ரத்தினகிரி அருகே உள்ள கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (43), தையல் தொழிலாளி இவரும், அதே ஊரைச் சோ்ந்த அவரது நண்பா் ஜோதியும் (40) பைக்கில் புதன்கிழமை மாலை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனா். ரத்தினகிரி மேம்பால அணுகுச் சாலையில் சென்றபோது, அந்த வழியே வந்த அரசு நகரப் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் மீட்கப்பட்டு, பூட்டுதாக்கு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சங்கா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். ஜோதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.