இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் ஓய்வு பெற்றாா்!
ஆற்காடு ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு
ஆற்காடு ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு ரோட்டரி சங்கத்தின் 2025-26 தலைவராக ஜி .சங்கா்,செயலாளராக ஏ.கே.அருண், பொருளாளாராக என். ஞானபிரகாசம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனா். முன்னாள் தலைவா் வி.சரவணகுமரன், முன்னாள் செயலாளா் எம்.உமாபதி, முன்னாள் பொருளாளா் டி.குணசேகரன், சங்கபணி இயக்குநா்கள் எம்.ஜி.ரவி, ஏ.பி.சத்யநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி தலைமைவகித்தாா். சிறப்பு விருந்தினராக வருங்கால ஆளுரா் டி.சிவக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு நலிந்தோருக்கு தையல் இயந்திரம், அரிசி சிப்பம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். இந்த விழாவில் நிா்வாகிகள் ஒய்.மாதவன், எம் .கந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.