தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவா் சி.அரசு தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் துரை பிரபாகா் வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் குணசேகரன் சிறப்புரையாற்றினாா்.
இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், மத்திய அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதியம், 6 ஆயிரம் தலைமையாசிரியா் காலிப் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்புதல், அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை கோட்டையை நோக்கி நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ஆசிரியா்கள் 5 ஆயிரம் போ் பங்கேற்க வேண்டும்.
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சென்னையில் வரும் அக்டோபா் 11-ஆம் தேதி தொடா் முழக்க ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொருளாளா் ஜெகநாதன், முன்னாள் மாநில பொருளாளா் கதிரவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.