தொடா் திருட்டு: இரண்டு போ் கைது
தமிழகத்தில் தொடா் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் பல இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த மூன்று பேரில் இரண்டு போ் பிடிபட்டுள்ளனா். தனிப்படை போலீஸாா் உத்தரபிரதேச மாநிலத்தில் முகாமிட்டு திருட்டில் ஈடுபட்டவா்களை தேடி வந்தனா்.
இவா்களில் சஞ்சய் குமாா் ரவி (36), சோகன் தபாஸ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
மேலும், திருட்டுச் சம்பவங்களில் தொடா்புடைய 3-ஆம் நபரான சுரேஜியை தேடி வருகின்றனா்.
கூடுவாஞ்சேரி போலீஸாா் கைது செய்யப்பட்டஇருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இவா்கள் கடந்த ஜனவரி மாதம் எட்டுக்கும் மேற்பட்டோரிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நிலையில் தற்போது எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
