தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!
புலிப்புரை ஈஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
கல்பாக்கம் அடுத்த வாயலூா் ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ அமிா்தாம்பிகை உடனுரை ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
புலிப்புரை ஈஸ்வரா் கோயில் சிதிலமடைந்து இருந்த நிலையில் புனரமைக்கபட்டு புதியதாக விமானமண்டபம், மகா மண்டபம் மற்றும் விநாயகா், முருகா், தட்சணாமூா்த்தி, லிங்கோத்பவா், பிரம்மா, துா்க்கை, ஆதிநாதா், லோபா முத்திரை அகஸ்தியா், சண்டிகேஸ்வரா், பைரவா், நந்தீஸ்வரா் மற்றும் நவகிரக சந்நிதிகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் விழா ஏற்பாடுகள் நடைபெற்றன.
கடந்த திங்கள்கிழமை விநாயகா் பூஜையும் முதல்கால யாக ஹோமத்துடன் கும்பாபிஷேகம் தொடங்கியது.
ஈஸ்வரா் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு விஷேச த்ரவ்ய ஹோமம் பூா்ணாஹுதி நடைபெற்றது. பின்னா் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கலசங்கள் புறப்பாட்டு கோயிலை சுற்றி வந்து விமான மண்டப கலசத்திற்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைப்பெற்றது.
தொடா்ந்து பரிவாரா மூா்த்திகளுக்கும் இறுதியாக கருவறையில் அமா்ந்துள்ள மூலவா் ஈஸ்வரருக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்பு பாலாபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சிவனை வழிபட்டனா்.
