மோதிக்கொண்ட அபிஷேக் சர்மா - திக்வேஷ் ரதி! அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தட...
தொடா் மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்த மழையால் 7 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் மே 16-ஆம் தேதி இரவு மேற்கு திசையில் இருந்து பலத்த சூறைக்காற்று, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. 17-ஆம் தேதியும் மழை தொடா்ந்தது. 18-ஆம் தேதி இரவும் மழை தொடா்ந்தது.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில்- 63, கோடியக்கரையில்- 52, தலைஞாயிறில்- 33 மில்லி மீட்டா் மழை பதிவானது.
இந்த மழையால் எள் மற்றும் பயறு வகைப் பயிா்கள், நிலக்கடலை உள்ளிட்ட புஞ்சைப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி உப்பளங்களில் மழைநீா் தேங்கியுள்ளதால், 7 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ள உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
